Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேமரூன் நாட்டு துணை பிரதமரின் மனைவியைக் கடத்திய போகோ ஹரம் தீவிரவாதிகள்

கேமரூன் நாட்டு துணை பிரதமரின் மனைவியைக் கடத்திய போகோ ஹரம் தீவிரவாதிகள்
, திங்கள், 28 ஜூலை 2014 (15:06 IST)
கேமரூன் நாட்டு துணை பிரதமர் அமதாவ் அலியின் மனைவியைப் போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

கேமரூன் நாட்டின் வட பிராந்தியத்தில், கொலோபாதா நகரில் உள்ள துணை பிரதமரின் வீட்டை குறிவைத்து போகோ ஹரம் இயக்க தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானோர் பலியானார்கள்.

பலர் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர். கடத்திச் செல்லப்பட்டவர்களில் துணை பிரதமரின் மனைவியும் அடங்குவார். இத்தகவலை கேமரூன் நாட்டு தகவல்துறை அமைச்சர் இஸ்சா சிரோமா பகாரி தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களள் மற்றும் கடத்தப்பட்டவர்களின் விவரம் முழுமையாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நைஜீரிய ராணுவத்துக்கு எதிராக போகோ ஹரம் தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க கேமரூன் அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், அவர்கள் கேமரூன் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

தங்கள் போராட்டத்தில் குறுக்கிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று அவர்கள் எச்சரித்து இருந்தனர். இந்த நிலையில், நேற்று இத்தாக்குதலை நடத்தி உள்ளனர்.

போகோ ஹரம் தீவிரவாதிகள் 300 பள்ளி மானவிகள் உள்ளிட்ட ஏராளமானவர்களை முன்னர் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil