Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குணமான கொரோனா நோயாளியை கூப்பிட வந்த கால்டாக்சி டிரைவருக்கு கிடைத்த ஆச்சரியம்

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (08:25 IST)
கால்டாக்சி டிரைவருக்கு கிடைத்த ஆச்சரியம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்த போதிலும் கொரோனா நோயிலிருந்து குணமாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது என்பது ஒரு ஆறுதலான செய்தி
 
இந்த நிலையில் உலகில் அமெரிக்காவை அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் இருந்து வருகிறது. இருப்பினும் இந்த நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கும் எந்தவித கட்டணமும் வாங்காமல் சேவை செய்து வருகிறார் 
 
இந்த நிலையில் நேற்று திடீரென அவருக்கு மருத்துவமனையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த அழைப்பு. இந்த அழைப்பை ஏற்று அவர் அந்த மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவமனையின் கதவை திறந்தவுடன் கைதட்டல் ஒலி கேட்டது. இதை பார்த்து அந்த கால் டாக்சி டிரைவர் ஆச்சரியமடைந்தார் 
 
இலவசமாக அவர் கொரோனா நோயாளிகளுக்காக செய்துவரும் சேவையை பாராட்டி மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் கைதட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மருத்துவமனை சார்பிலும் மருத்துவமனை ஊழியர்கள் சார்பிலும் ஒரு பெரிய தொகையை காசோலையாகவும் அவருக்கு வழங்கப்பட்டது
 
திடீரென கிடைத்த மரியாதை மற்றும் காசோலையை பார்த்து நெகழ்ச்சியுடன் அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். இது குறித்த வீடியோவை ஸ்பெயின் நாட்டின் டாக்சி டிரைவர்கள் சங்கம் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது என்பதும் அந்த வீடியோவுக்கு 11 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் கிடைத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments