Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால் சென்டர் ஊழியர்கள் 126 பேர் கைது : போலீஸார் அதிரடி

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (09:48 IST)
நொய்டாவில் போலியான கால் சென்டர் நிறுவனம் ஒன்று இயங்கி வந்துள்ளது. அதில் பணியாற்றிய 126 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில், 63வது செக்டார் இடத்தில் சந்தேகத்திற்கு ஏதுவான வகையில் ஒரு கட்டிடத்தில்   வேலைகள் நடந்து வருவதாக  வந்த தகவலை அடுத்து கடந்த வியாழக்கிழமை அன்று  இரவில் போலீஸார் இந்த நிறுவனத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தினார்கள்.
 
அப்போது அங்கு ஏராளமான செல்பொன்கள் இருந்துள்ளன.  போலீஸாரின் சந்தேகத்தை உறுதி செய்யும் விதத்தில் அங்குள்ள பணியாளர்களின் நடவடிக்கைகள் இருந்ததால் அவர்கள் அத்துனை பேரையும் கைது செய்தனர்.
 
ஆனால் வெள்ளிக்கிழமை அன்றுதான் போலீஸார்  இந்த தகவலை வெளியே கூறினார்கள்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:
 
இது ஒரு போலியான கால் சென்டர் நிறுவனம். இரவு வேளையில் அமெரிக்கக்குடி மக்களுக்கு தொடர்பு கொண்டு அவர்களுடன் பேசி அவர்களது சோசியல் செக்கியூரிட்டி எண்ணில் கோளாறு இருப்பதாகக் கூறி அதனை சரிசெய்வதற்காக பணம் பறித்து வந்துள்ளனர்  என்று விசாரணையில் தெரியவந்ததாக கூறினார்.
 
அதாவது , அமெரிக்கர்களுக்கு 9 இலக்க சமுக பாதுகாப்பு எண் வழங்கப்பட்டுள்ளது . இந்த என்ணிற்கு கோளாறு என்று இந்த கால் சென்டர் ஊழியர்கள் அமெரிக்கர்களைத் தொடர்பு கொண்டு பேசி  அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 
 
மேலும் கனடா, அமெரிக்கா உட்பட பல நாட்டு மக்களை இவ்வாறு ஏமாற்றி உள்ளதாக 126 பேரை கைது செய்துள்ள சம்பவம் நாட்டில் பரபரப்பாகி வருகிறது.இந்த கும்பலுக்கு வேறு மாநிலத்தில் தொடர்பு இருக்குமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments