Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூடானின் 6 மாத குழந்தைக்கு சென்னையில் அறுவை சிகிச்சை.. தாயிடம் இருந்து கல்லீரல் தானம்..!

Siva
செவ்வாய், 11 ஜூன் 2024 (11:33 IST)
பூடான் நாட்டை சேர்ந்த ஆறு மாத குழந்தைக்கு சென்னையில் அறுவை சிகிச்சை நடந்ததாகவும் இந்த அறுவை சிகிச்சைக்காக தாயிடம் இருந்து கல்லீரல் தானம் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

பூடான் நாட்டை சேர்ந்த பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்த குழந்தைக்கு பித்த நீர் குழாய் தடைப்பட்டிருந்ததாகவும் கல்லீரலில் இருந்து வெளியேறும் பித்த நீர் வெளியேறாமல் தேங்கி விட்டதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

மிகவும் அரிதாக ஏற்படும் இந்த பிரச்சனைக்கு கொல்கத்தாவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது.

இதனை அடுத்து குழந்தையின் தாயிடம் இருந்து 300 கிராம் கல்லீரல் தானமாக பெற்று 8 மணி நேரம் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாகவும் குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து தற்போது குழந்தை நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூடான் நாட்டின் ஆறு மாத குழந்தைக்கு சென்னையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க கூல்ட்ரிங்க்ஸ், உணவுகளுக்கு தடை! தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

8 மாவட்டங்களில் காத்திருக்குது மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments