மெக்காவுக்கு புனித யாத்திரை சென்ற பேருந்து விபத்து- 4 பேர் பலி

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (11:52 IST)
இங்கிலாந்தில் இருந்து மெக்காவுக்கு புனித யத்திரை மேற்கொண்டவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 17 பேர் பேருந்தில் புனித யாத்திரை சென்றுள்ளனர். அப்போது பேருந்து அல் கலாஸ் என்ற பகுதியருகே சென்ற போது பெட்ரோலை ஏற்றி வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில் அந்த பேருந்தில் பயணம் சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஏற்கனவே 2017-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 6 பேர் மெக்காவுக்கு புனித யாத்திரை சென்ற போது விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை

கரூர் சம்பவம் குறித்து அஜித் கருத்து.. துணை முதல்வர் உதயநிதியின் ரியாக்சன்..!

வங்கக்கடலில் உருவானது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.17 லட்சம் ஏமாந்தாலும் உடனே சுதாரித்த மூதாட்டி.. துரித நடவடிக்கையால் பணம் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments