Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரெக்ஸிட் மசோதாவில் திருத்தம். பிரதமர் தெரசாவுக்கு பின்னடைவு

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (06:20 IST)
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் முடிவை கடந்த ஆண்டு எடுத்தது. இந்த முடிவால் அதிருப்தி அடைந்த பிரிட்டன் பிரதமர் கேமரூன் ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக பொறுப்பேற்ற தெரசா மே, பிரக்ஸிட்டில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.




ஆனால் பிரெக்ஸிட் மசோதாவில் திருத்தம் தேவை என்று அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் தீர்மானம் பிரதமரின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியதால் அவர் அவருக்கு தனிப்பட்ட முறையில் தோல்வி கிடைத்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரெக்ஸிட் மசோதாவுக்கு ஏற்கனவே நாடாளுமன்ற கீழவையில்  ஒப்புதல் கிடைத்துவிட்டது. ஆனாலும் மேலவையில் ஒப்புதல் கிடைத்தால்தன் இந்த மசோதா நிறைவேறும். இந்த நிலையில் பிரக்ஸிட் மசோதாவில் திருத்தம் வேண்டும் என்று 358 எம்.பி.க்களும் திருத்தம் தேவையில்லை என்று அரசுக்கு ஆதரவாக 256 பேரும் வாக்களித்தனர்.

இந்த மசோதாவில் முக்கிய திருத்தமாக, 'ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிட்டன் வெளியேறினாலும், பிரிட்டனில் வசித்து வரும் பிற 27 ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரிட்டனின் 358 எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறியது அரசுக்கு தோல்வியாக கருதப்படினும் இப்போதைக்கு ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments