உக்ரைன் மீது குண்டுவீசி தாக்குதல்! போர் தொடங்கியதா? – உலக நாடுகள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (08:34 IST)
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில் திடீரென உக்ரைன் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை திரட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனின் டான்பஸ் மாகாணத்தின் பாதி பகுதியை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றியிருந்த நிலையில் மீத பகுதி உக்ரைன் ஆளுகையின் கீழ் உள்ளது. இந்நிலையில் உக்ரைன் எல்லைக்குட்பட்ட ஸ்டைனிஸ்டியா லுகஸ்டா என்ற நகரில் உள்ள கிராமப்பகுதி மீது திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலை ரஷ்யாதான் நடத்தியிருக்க வேண்டும் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இந்த தாக்குதலை நேரடியாக ரஷ்யா நடத்தியதா அல்லது ரஷ்ய ஆதரவு பெற்ற புரட்சி குழு நடத்தியதா என்பது குறித்த முழு விவரங்கள் தெரியவரவில்லை. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் போரை தொடங்கும் அறிகுறியா என உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

தீபாவளி தினத்தில் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments