Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (17:12 IST)
முஸ்லீம் நாடான வங்கதேசத்தில் இன்று ரமலான் பண்டிகையின் போது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் ரமலான் பண்டிகை நாளான இன்று வங்கதேச நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.


 
 
இன்று காலை வங்கதேசத்தின் கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் ஷோலாகியா நகரிலுள்ள திடலில், சுமார் 3 லட்சம் பேர் பெருநாள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடலின் அருகே பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது.
 
கூர்மையான ஆயுதங்கள், வெடிகுண்டுகளுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் வந்த வேகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை கூர்மையான ஆயுதங்களால் தாக்கிவிட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
 
பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.
 
தாக்குதல் நடந்த திடலுக்கு அருகில் உள்ள பள்ளிக்குள் தீவிரவாதிகள் தங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது, இதனால் அங்கு பாதுகாப்புப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments