Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போகோ ஹரம் தீவிரவாதிகள் பிடியில் இருந்து சிறுமிகள் உள்பட 63 பேர் தப்பினர்

Webdunia
திங்கள், 7 ஜூலை 2014 (11:45 IST)
நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் பிடியில் இருந்து சிறுமிகள் பெண்கள் உள்ளிட்ட 63 பேர் தப்பி வந்தனர்.

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோ ஹரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி போர்னோ மாகாணத்தில் கிபக் நகரில் 300 பள்ளி மாணவிகளைக் கடத்திச் சென்றனர். அவர்களை விடுவிக்க தங்களது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை விடுதலை செய்ய நிபந்தனை விதித்தனர்.

ஆனால் அதை ஏற்க நைஜீரிய அரசு மறுத்துவிட்டது. எனவே கடத்தப்பட்டு பல நாட்களாகியும் மாணவிகள் தீவிரவாதிகளின் பிடியிலேயே உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் போர்னோ மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள தம்போவா நகரம் அருகே கிராமங்களில் புகுந்த தீவிரவாதிகள் மீண்டும் பெண்கள் சிறுமிகள் உள்ளிட்ட 68 பேரை கடத்தி சென்றனர்.

இந்நிலையில்  தீவிரவாதிகளின் பிடியில் இருந்து 63 பெண்கள் மற்றும் சிறுமிகள் தப்பி வந்துள்ளனர். இந்தத் தகவலை அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே தம்போவா அருகேயுள்ள ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments