Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் : நைஜீரியாவில் 45 பேர் பலி

Webdunia
சனி, 22 நவம்பர் 2014 (13:12 IST)
நைஜீரியாவின் கிராமம் ஒன்றில் போகோ ஹரம்  தீவிரவாதிகள் நிடத்திய தாக்குதலில் 45 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்திலுள்ள அஸாயா குரா என்னும் கிராமத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அந்தப் பகுதியின் ஊராட்சித் தலைவர் ஷெட்டிமா லாவான் தெரிவித்துள்ளார்.
 
பயங்கர ஆயுதங்களுடன் மதியம் 12 மணியளவில் தீவிரவாதிகள்  மோட்டார் சைக்கிள்களில் கிராமத்துக்குள் வந்து, கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதுடன், வீடுகள், வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது.
 
இந்தத் தாக்கதலில், 45 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் குண்டுக்காயங்களுடன் அருகிலுள்ள புதர்ப் பகுதிக்கு தப்பிச் சென்ற மேலும் சிலர், உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
 
தீவிரவாதிகள் தீ வைத்ததில் கிராமத்திலிருந்த பாதிக்கும் மேற்பட்ட வீடுகள், 50 மோட்டார் சைக்கிள்கள், 4 கார்கள் சேதமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், அப்பகுதி மக்கள் வைத்திருந்த உணவுப் பொருள்கள், மற்றும் கால்நடைகளை தீவிரவாதிகள் எடுத்துச் சென்றதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
 
நைஜீரியாவில் பொதுமக்கள் மீது இது போன்ற தாக்குதல்களில் தீவிரவாதிகள் அடிக்கடி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments