Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்மா! தாயே! தர்மம் பண்ணுங்க: வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் பிச்சைக்காரர்கள்

அம்மா! தாயே! தர்மம் பண்ணுங்க: வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் பிச்சைக்காரர்கள்
, புதன், 15 ஜூன் 2016 (15:02 IST)
நவீன உலகில் தொழில் ரீதியாக தங்கள் பணியை விரைந்து, எளிதில் முடிக்க பல உபகரணங்கள் பயன்படுகின்றன. உலக அளவில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ள இந்த நிலையில் பிச்சை எடுப்பவர்கள் தற்போது புது விதமான உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.


 
 
அந்த வகையில் தற்போது பிச்சை எடுப்பவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் பயனாளர்களை குறிவைத்து பணம் தந்து உதவுங்கள் என பிச்சை எடுப்பதாக ஐக்கிய அரபு அமீரக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
உலக அளவில் கோடி கணக்கில் பயனாளைர்களை கொண்ட வாட்ஸ் ஆப் மெஸ்ஸெஞ்சர் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தளத்தின் மூலம் நண்பர்கள், குடும்பத்தினரை மிக எளிமையாக தொடர்பு கொள்ளலாம். மேலும் பிரச்சணைகளை வெளிக்கொண்டு வருவதிலும் முக்கிய பங்குவகிக்கிறது.
 
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக இணையதளம் ஒன்றின் சமீபத்திய அறிக்கையில், பிச்சைக்காரர்கள் வாட்ஸ் ஆப் மூலம் அதன் பயனாளர்களை குறிவைத்து தங்களுக்கு பணப்பறிமாற்றம் செய்து உதவி செய்ய கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரபு நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பல்வேறு நம்பர்களிடம் இருந்து அடையாளம் தெரியாத பிச்சைக்காரர்கள் தங்கள் முகவரி, அக்கவுண்ட் நம்பர் முதலியவை அனுப்பி பண உதவி செய்யுமாறு அனுப்பியுள்ளனர். அந்த பெண் காவல் துறையில் அளித்த புகாரின் பின்னர் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
 
மக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். குற்றவாளிகள் மற்றும் அனுதாபிகள் மக்களை குறிவைப்பார்கள். மேலும் பிச்சைக்காரர்கள் மனதை தொடும் அளவுக்கு பேசி, பொய் கதைகளை சொல்லி உங்களை நம்ப வைத்து பணம் பறிப்பார்கள் எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அபுதாபி காவல் நடவடிக்கைகள் இயக்குனர் ஜெனரல் அமீர் முகமது அல் முஹைரி அறிவுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுட்டவர்கள் இறந்தார்களா என்பதை சோதித்த கொலையாளி