Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துர்கா பூஜை செலவை குறைத்து ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு உதவிய இந்துக்கள்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (14:58 IST)
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் துர்கா பூஜை செலவை குறைத்துக்கொண்டு மியான்மரில் இருந்து அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு நிதியுதவி செய்துள்ளனர்.  


 

 
இந்து பண்டிகைகளில் ஒன்றான துர்கா பூஜா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒன்று. ஆனால் ஓடிசா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய பகுதிகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். வங்க தேசத்திலும் இந்துக்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் அங்கும் துர்கா பூஜா சிறப்பாக கொண்டாடப்படும். 
 
மியான்மரில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் சுமார் 4,20,000 பேர் வங்க தேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். துர்கா பூஜை கொண்டாட சில கமிட்டிகள் உண்டு. அந்த கமிட்டிகள் அங்குள்ள இந்துகளிடம் பணம் வசூலித்து துர்கா பூஜையை சிறப்பாக நடத்துவது வழக்கம்.
 
தற்போது அந்த கமிட்டிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், வங்க தேசத்தில் வாழும் இந்துக்கள் மியான்மரில் நடக்கும் கலவரங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். வங்க தேசத்துக்கு லட்சக்கணக்கில் அகதிகள் வந்து குவிகின்றனர். அவர்களுக்கு உதவ இந்து சமுதாயம் விரும்புகிறது. 
 
அதன்படி துர்கா பூஜைகளுக்கான செலவுகளை மிகவும் குறைத்துக்கொண்டு அந்த பணத்தை அகதிகளுக்கு நிதியுதவி வழங்கலாம் என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

இறக்குமதிக்கு தடை.. கப்பலும் வரக்கூடாது. பாகிஸ்தானுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா..!

விஜயபிரபாகரனுக்கு என்னுடைய பதவியா? தேமுதிகவில் இருந்து விலகும் பிரபலம்..!

மோடி, அமித்ஷா எனக்கு தற்கொலை வெடிகுண்டு கொடுத்தால் பாகிஸ்தானை அழிக்கிறேன்: அமைச்சர் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments