Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகதிகள் படகு விபத்து ; கடலில் பிணமாக மீட்கப்பட்ட ஒரு வயது குழந்தை

Webdunia
செவ்வாய், 31 மே 2016 (14:02 IST)
ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக கடல் பயணம் செய்து, ஏராளமான அகதிகள் உயிர் இழக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


 

 
போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளான, சிரியா, ஈராக், ஏமன், துருக்கி, லிபியா போன்ற நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று குடியேற ஆபத்தான கடல்வழிப் பயணத்தை மேற்கொண்டு உயிரிழந்து வருகின்றனர்.
 
கடந்த வாரம், மத்திய தரைக்கடலில் அகதிகள் சென்ற படகுகள் கடலில் மூழ்கியது. இதில் 700க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 600கும் மேற்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
 
அதேபோல், கடந்த வியாழக்கிழமை, லிபியாவில் இருந்து இரண்டு மீன் பிடி படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகளில் இத்தாலிக்கு செல்ல முயன்றனர். அப்போது படகு விபத்து ஏற்பட்டது. அதில் 45 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் 75 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 550 அகதிகளின் நிலை என்னவென்றே தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 
அந்த சம்பவத்தின் போது, ஒரு ஜெர்மானிய நாட்டை சேர்ந்த ஒரு மீட்புக் குழு அதிகாரி ஒருவர் தன்னுடைய கைகளில், ஒரு வயதுடைய இறந்து போன குழந்தையின் சடலத்தை வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இதுபற்றி அந்த அதிகாரி மார்ட்டின் கூறும்போது “கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த குழந்தையின் பிஞ்சுக் குழந்தையின் கைகளை பிடித்து தூக்கி அரவணைத்துக் கொண்டேன். அந்த குழந்தையின் கண்களில் எந்த அசைவும் இல்லை. 6 மணி நேரத்திற்கு முன்பு அந்த குழந்தை கண்டிப்பாக உயிருடன் இருந்திருக்க வேண்டும்” என்று உருக்கமாக கூறினார்.
 
இதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகமல் தடுக்க வேண்டுமென்றால், அகதிகள் பிரச்சனைக்கு ஐரோப்பிய நாடுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments