Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரோன் மூலம் ரஷிய அதிபர் புதினை கொல்ல முயற்சி

Webdunia
புதன், 3 மே 2023 (19:05 IST)
அதிபர் புதினை கொல்ல முயற்சி மேற்கொண்டதாகவும் அதை முறியடித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷியா நாடு  உக்ரைன் மீது கடந்தாண்டு போரிட்டது. இப்போரிற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும், ரஷியா அதைப் பொருட்படுத்தவில்லை.

எனவே, உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளும் நேட்டோ கூட்டமைப்புகளும் நிதியுதவி மற்றும் ஆயுதவுதவி செய்து வருகின்றன.

இதனால், உக்ரைன், ரஷியாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில்,கடந்தாண்டு டிசம்பர் முதல் தற்போது வரை உக்ரைன் போரில் சுமார் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கூறியது.

இந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் வசித்து வரும் கிரிம்லினை குறிவைத்து நேற்றிரவு டிரோன் தாக்குதல்  நடத்தப்பட்டதாகவும், 2 முறை  நடத்தப்பட்ட இம்முயற்சி முறியடிக்கப்பட்டதாக ரஷியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  மாளிகை மீது  பறந்த 2 டிரோன்கள் மூலம்  தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், மின்சார ரேடார் மூலம் வீழ்த்தப்பட்டதாகவும் இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால், புதின் தற்போது மாஸ்கோ நகருக்கு வெளியேயுள்ள ஒடின்ஸ்வொஸ்கை மாவட்டத்திலுள்ள தன் பிரமாண்ட பங்களாவான நெவோ- ஒயொவாவில் தங்கியுள்ளதாகவும், அதிபர் புதினை கொல்ல உக்ரைன் மேற்கொண்ட முயற்சிக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா தரப்பில் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களை துரத்தி சென்ற திமுக கொடி உள்ள கார்! காரணம் இதுதானா? டிஜிபி அலுவலகம் கொடுத்த விளக்கம்!

மகா கும்பமேளா உயிரிழப்பு 30 ஆக உயர்வு! தனிப்படை அமைத்து விசாரணை!

ஈமு கோழி வழக்கு.. 13 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு..!

ஆட்டோ கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்தினால் நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கை..!

யூட்யூப் பிரபலம்னா என்ன வேணாலும் செய்யலாமா? சிறுவர்களை துன்புறுத்தி வீடியோ எடுத்த திவ்யா கள்ளச்சி! - அதிரடி கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments