Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென் கொரியாவிற்கான அமெரிக்க தூதரை கத்தியால் குத்திக் கிழித்த போராளி

தென் கொரியாவிற்கான அமெரிக்க தூதரை கத்தியால் குத்திக் கிழித்த போராளி
, வியாழன், 5 மார்ச் 2015 (20:11 IST)
தென் கொரியாவிற்கான அமெரிக்க தூதரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்படுள்ளார்.
 
சியோல் நகரில் தென் கொரியாவிற்கான அமெரிக்க தூதர் மார்க் லிப்பெர்ட்(42) புதன்கிழமை (04-03-15) காலை உணவின்போது, அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்க தூதரை கொரிய போராளி ஒருவர், தென் கொரியா மற்றும் வடகொரியா மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்று கத்தியுள்ளார்.
 

 
மேலும், தான் வைத்திருந்த கத்தியை கொண்டு அமெரிக்க தூதரை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் போராளியை மடக்கி, பிடித்து கைது செய்துள்ளனர்.
 
இதில் பலத்த காயமடைந்த அமெரிக்க தூதர் மார்க் லிப்பெர்ட் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உயிருக்கு எந்தஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கைது செய்யப்பட்டுள்ள போராளி அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், போராளி வட கொரியாவின் ஏஜென்ட்தான் என்பதற்கு எந்தவொரு தடையமும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
webdunia

 
அமெரிக்க அதிபர் ஒபாமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க் லிப்பெர்ட்டிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கப் பாதுகாப்புத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
சமீபத்தில் தென்கொரியாவின் கடல் பகுதியில் அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. இது தனது நாட்டின் மீது போர் தொடுப்பதற்கான நடவடிக்கை என்று கருதிய வடகொரியா இந்த போர் பயிற்சி தொடங்கும் முன்பாகவே தென்கொரியாவை நோக்கி ஏவுகணை தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil