Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதமாலா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 300?

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (13:51 IST)
கவுதமாலாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


 
 
கவுதமாலாவின் தலைநகரான கவுதமாலா நகரில் கடந்த ஒருவார காலமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மலைப்பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் தங்களது வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர்.
 
நிலச்சரிவு ஏற்பட்ட அன்று பலி எண்ணிக்கை 25 ஆக இருந்தது. ஏராளமானோர் மண்ணில் புதைந்ததால் பலி எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து தற்போது 131 ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் நிலச்சரிவில்  சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தவில்லை.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments