Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீவிரவாத தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டிய அமெரிக்க இளைஞர் கைது

தீவிரவாத தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டிய அமெரிக்க இளைஞர் கைது
, வெள்ளி, 1 ஜனவரி 2016 (19:08 IST)
தீவிரவாத தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டிய அமெரிக்க இளைஞர் கைது செய்யப்பட்டதையடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சில இடங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது தாக்குதல் நடத்தச் சதித்திட்டம் வகுத்ததாக இம்மானுவல் என்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தாக்குதல் நடத்தக்கோரி ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து தனக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டதாகவும் விசாரணையின் போது அவர் தெரிவித்தார்.
 
இதையடுத்து ரோசெஸ்டர் (ROCHESTER) பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் விடுதியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததையும் போலீசாரின் விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டார். தாக்குதல் நடத்துவதற்காக அவர் வைத்திருந்த கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil