Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்ரான்கான் மீது பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் ரத்து

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (23:19 IST)
முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் மீது பிறப்பிக்கப்பட்ட  கைது வாரண்டை  நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
 

பாகிஸ்தான் நாட்டில், பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது.   கடந்தாண்டு முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக ஏப்ரல் மாதம் சுமார் 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில், அவர் பிரதமராக இருந்தபோது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கிடைத்த பரிசுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றதக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் இறுதியில்,  லாசூர் நீதிமன்றம், இம்ரான்கானுக்கு ஜாமீனில்  வெளிவரமுடியா பிடிவாரண்ட்  பிறப்பித்தது. இந்த உத்தரவை அடுத்து, இம்ரான்கான் வீட்டிற்குப் போலீசார் சென்றபோது, அவர் தலைமறைவானார்.
 
இதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம்தேதி நடந்த பிரமாண்ட பேரணியின்போது,  பாகிஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிஜெபா சவுத்ரி மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கு விசாரணையில் இம்ரான்கான் தொடர்ந்து ஆஜராகாமல் உள்ளார்.

இஸ்லாமாத் நீதிமன்றம் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது.அதன்படி, வரும் 29 ஆம் தேதிக்குள் அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென்று போலீஸாருக்கு  நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த  நிலையில், இன்று சிறப்பு போலீஸ்படை, இம்ரான்கான் வீட்டிற்குச் சென்று கைது செய்ய முயற்சித்தனர்.

இதற்கிடையே, இம்ரான்கானுக்கு எதிராக பிறப்பிக்கப்பட பிடிவாரணடை ரத்து செய்யக்கோரி இனறு  நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வரும் மார்ச் 16 ஆம் தேதிவரை இம்ரான்கானை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இன்று , லாகூரில் இம்ரான்கான் தலைமையில் தேர்தல் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி போராட்டம்: அன்புமணி அறிவிப்பு..!

விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அவசியம் தான்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்..!

அடுத்த மாதம் திருமணம்.. நேற்று பரிதாபமாக ரயில் விபத்தில் இறந்த வாலிபர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியதால் ஆத்திரம்.. நீதிபதி மீது செருப்பை வீசிய கைதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments