Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புற்றுநோயாளிக்கு இறுதி ஆசையை நிறைவேற்றிய அர்னால்ட்

புற்றுநோயாளிக்கு இறுதி ஆசையை நிறைவேற்றிய அர்னால்ட்
, வெள்ளி, 22 ஜனவரி 2016 (18:39 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், ஆஸ்திரியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியவரின் ஆசையை நிறைவேற்றி தான் புகைக்கும் சுருட்டையும் அன்பளிப்பாக தந்து, அந்த முதியவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


 
 
ஆஸ்திரியா நாட்டில் வசிக்கும் ஜோசப் மிட்டர்மியர் என்ற வயதான முதியவருக்கு புற்றுநோய் இருப்பதை சமீபத்தில் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இவர் இனி நீண்டநாள் உயிர்வாழ முடியாது என அவரது மகளிடம் மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
 
இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டின் தீவிரமான ரசிகராக ஜோசப் இருந்து வந்துள்ளார், அர்னால்ட்டுடன் ஒரேயொரு முறை தொலைபேசி வழியாக பேச வேண்டும் என்பதை தனது மகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், அர்னால்ட் புகைக்கும் சுருட்டுகளில் ஒன்றை அவரிடமிருந்து அன்பளிப்பாக பெறுவது தான் எனது கடைசி ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.
 
அவரது மகளான சாரா,  புற்றுநோயால் பதிக்கப்பட்ட எனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற உதவி செய்யுமாறு பேஸ்புக்கில் செய்தியை வெளியிட்டுள்ளார். இதை சுமார் ஒருலட்சம் பேர் ‘ஷேர்’ செய்துள்ளனர். இதை பார்த்த ஜெர்மனியை சேர்ந்த ஹாலிவுட் நடிகரான ரால்ப் மோல்லெர் அர்னால்டிடம் தெரிவித்துள்ளார். 
 
இதை அறிந்த அர்னால்ட் உடனடியாக அந்த முதியவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நீண்ட நேரம் பேசி அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். மேலும், தனது அபிமான சுருட்டுகளை அன்பளிப்பாகவும் அனுப்பி வைத்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை ஜோசப்பின் மகள் சாரா ஆஸ்திரியா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil