Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவாகிறது ‘அரபு நேட்டோ’.. 22 நாடுகள் இணைந்து எடுத்த முடிவு..!

Mahendran
செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (17:42 IST)
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 'அரபு நேட்டோ' என்ற புதிய ராணுவ கூட்டமைப்பை உருவாக்க முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. 
 
அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், எகிப்து முன்மொழிந்த இத்திட்டத்திற்கு பாகிஸ்தான், துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
 
எகிப்து அரசு கடந்த 2015-ம் ஆண்டிலேயே ஒருங்கிணைந்த அரபு ராணுவ கூட்டமைப்பை உருவாக்க முன்மொழிந்தது. ஆனால், இஸ்ரேல் அண்மையில் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, கத்தாரில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் இத்திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
 
'அரபு நேட்டோ' தலைமையகம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமையலாம். இப்படைகளின் தலைமை பொறுப்பை அரபு லீக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 22 உறுப்பு நாடுகளும் சுழற்சி முறையில் ஏற்றுக்கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த 'அரபு நேட்டோ' உருவாக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..!

ஏற்கனவே 3 குழந்தைகள்.. இன்று ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.. மொத்தம் 7 குழந்தைகள்..!

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றமா? என்ன காரணம்?

பாமகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! மேடையில் அறிவுறுத்திய உதயநிதி ஸ்டாலின்!?

சிவாஜிநகர் மெட்ரோ நிலையத்திற்கு புனித மேரி என பெயர் மாற்றமா? அமைச்சர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments