Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'நான் ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் பெருமையடைகிறேன்' - ஆப்பிள் நிறுவனத் தலைவர்

'நான் ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் பெருமையடைகிறேன்' - ஆப்பிள் நிறுவனத் தலைவர்
, வெள்ளி, 31 அக்டோபர் 2014 (11:32 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (சி.இ.ஓ) டிம் குக், 'நான் ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.
 
அமெரிக்காவின் பிரபல எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் டிம் குக்.
 
இவர் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு எழுதியுள்ள ஒரு கட்டுரையில், "நான் ஓரினச் சேர்க்கையாளன் என்பதில் பெருமைப்படுகிறேன். இதை கடவுள் எனக்கு கொடுத்த மிகச் சிறந்தப் பரிசாக கருதுகிறேன்.
 
நான் ஓரினச்சேர்க்கையாளர் என்பது, என்னுடன் பணியாற்றும் பலருக்கு தெரியும். ஆனால் அவர்கள் என்னிடம் எந்த விதத்திலும் வித்தியாசமாக நடந்து கொள்வதில்லை. ஓரினச் சேர்க்கையாளர் பலர் தங்கள் அடையாளத்தை தெரியப்படுத்துவதில் சிக்கலை சந்திக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்க விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
இவரது இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து  தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவன தலைவர் ஆர்ட் லெவின்சன், 'டிம் குக் தைரியசாலி' என கூறியுள்ளார்.
 
டிம் குக்கின் இந்த கருத்துக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil