ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்துக் கோவில் மீது தாக்குதல்

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (19:55 IST)
வெளிநாடுகளில்  உள்ள இந்துக்கோயில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடந்து வரும் நிலையில், இன்று மீண்டும் ஆஸ்திரேலியாவிலுள்ள  இந்துகோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில், பிரதமர் ஆண்டனி அல்பனேசி தலைமையிலான ஆஸ்திரேலியா லேபர் பார்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைப் போன்று இங்கும் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 4  மாதங்களில் மட்டும் இங்குள்ள இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில், இதுபற்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்., வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசினார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்துக்கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

பிரிஸ்பேனில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணன் கோவிலில் உள்ள சுற்றுச்சுவரில், இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராவும் வாசகங்கள் எழுதிவைத்துள்ளனர்.

இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். இதுவரை 2 மாதங்களில் மட்டும் 4 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments