Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒபாமாவை சந்தித்தார் நரேந்திர மோடி: கீதையை ஒபாமாவுக்குப் பரிசளித்தார்

ஒபாமாவை சந்தித்தார் நரேந்திர மோடி: கீதையை ஒபாமாவுக்குப் பரிசளித்தார்
, செவ்வாய், 30 செப்டம்பர் 2014 (11:14 IST)
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார்.
 
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, நரேந்திர மோடியை சந்தித்தார். பின்னர் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் விருந்து அளித்தார். மோடி நவராத்ரி நோன்பில் இருப்பதால் அவர் சூடன தண்ணீர் மட்டுமே அருந்தினார். 
 
இந்த விருந்து நிகழ்ச்சிக்கு பிறகு டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ள நதேரந்திர மோடி, “அதிபர் ஒபாமாவுடன் அருமையான சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்“ என்று தெரிவித்துள்ளார்.
 
பின்னர் ஒபாமாவுக்கு, நரேந்திர மோடி கீதையின் சிறப்பு பதிப்பு ஒன்றையும், மகாத்மா காந்தியின் விளக்கம் அடங்கிய புத்தகத்தையும் பரிசளித்தார். பின்னர் இரு தலைவர்களும் தங்கள் பதவி ஏற்கும் முன் நடந்த  நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
 
இரு தலைவர்களும் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே தங்கள் பிரச்சாரத்தில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினர். தங்கள் ஆட்சி அமைக்கும் போது இரு தலைவர்களும் தலைநகரத்துக்கு வெளியே உள்ள நகரத்தை சேர்ந்தவர்கள். என்று சையது அக்பரூதின் தெரிவித்தார்.
 
இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடியுடன் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் சென்றனர்.
 
ஒபாமா, மோடிக்கு விருந்த அளித்தபோது வெள்ளை மாளிகை முன்பு அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் கலாச்சர நிகழ்ச்சிகள் நடனங்கள் ஆடினர்.
 
காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் சீக்கிய அமைப்பை சேர்ந்த சிலர் வெள்ளை முளிகை முன்பு போரட்டத்திலும் ஈடுபட்டனர். சமீபத்தில் வெள்ளை மாளிகையில் இரண்டு முறை பாதுகாப்பு விதி முறைகள் மீறப்பட்ட காரணத்தால் பிளயர் இல்லம் மற்றும் வெள்ளை மாளிகை பலத்த பாதுகாப்புடன் இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil