Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தேர்தலில் தலையிட அமெரிக்கா முயற்சி: ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டு

Siva
வியாழன், 9 மே 2024 (19:28 IST)
இந்திய தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக ரஷ்யா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியாவில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவின் புரிதல் மற்றும் வரலாறு தெரியாமல் அமெரிக்கா பேசி வருகிறது என்றும், இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருவது இந்தியாவின் தேர்தலில் அமெரிக்க தலையிட முயற்சி செய்வதாக குறிப்பிடுகிறது என்றும் ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது 
 
ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளரின் இந்த அறிக்கையில் இந்தியாவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க வேண்டும் என்றுதான் அமெரிக்கா முயற்சிக்கிறது என்றும் இந்திய பொது தேர்தலை சிக்கல் ஆகும் நோக்கில் அமெரிக்கா இப்படி செய்வது முறையானது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments