Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா மீது பொருளாதார தடை: மோடியின் கோரிக்கையை ஏற்பாரா டிரம்ப்?

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (14:12 IST)
டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற பின்பு அமெரிக்காவின் எதிரியான ரஷ்யாவுக்கு சிஏஏடிஎஸ் சட்டத்தின் கீழ் பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இந்த வரிசையில் தற்போது ஈரான், வடகொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளோடு இந்தியாவும் சேர்க்கப்படவுள்ளதாம். 
 
இந்திய அரசு அண்டை நாட்டு தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து போர் ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் செயல்பட்டுவந்தது. தற்போது ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா - ரஷ்யா கையெழுத்திட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், ஏற்கனவே, ஈரான் விவகாரத்தில் இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்த அமெரிக்கா, ரஷ்யா விவகாரத்திலும் மிரட்டல் விடுத்தது. இந்த மிரட்டல்களை மீறியே இந்தியா ரஷ்யாவுடன் ஒப்பந்தம் வைத்துள்ளது. 
 
இந்தனால், இந்தியா மீது பொருளாதார தடையை விதிப்பதை தவிர வேறு வழி இல்லை என அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் மட்டுமே இந்த தடையை நீக்கக்கூடிய அதிகாரம் படைத்தவராக இருப்பதால், அமெரிக்காவின் தடையை விலக்க அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை விடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. 
 
என்னதான் நட்பு நாடாக இந்தியா மற்றும் அமெரிக்கா பழகி வந்தாலும் இந்த கோரிக்கை டிரம்ப் ஏற்பாரா என்பது சந்தேகமே.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments