Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் தேர்தல் ; ஓட்டு எண்ணிக்கை தொடக்கம் : ஹிலாரி முதலிடம்

அமெரிக்க அதிபர் தேர்தல் ; ஓட்டு எண்ணிக்கை தொடக்கம் : ஹிலாரி முதலிடம்

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (19:08 IST)
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் அமெரிக்காவில் இன்று நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும்(68), குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும்(68) களத்தில் உள்ளனர். அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.


 

 
இருவரும் ஒருவருக்கு ஒருவர் தனிப்பட்ட விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் வைத்து மிகவும் பரபரப்பாக இருந்தது இந்த தேர்தல் பிரச்சாரக்களம். 
 
மொத்தம் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்களிக்கிறார்கள்.  அங்கு மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்திலும் வாக்குப்பதிவு தொடங்கும் மற்றும் முடியும் நேரம் ஒவ்வொரு மாகாணத்திற்கும் மாறுபடும்.  அந்த மாகாணங்களிலும், தலைநகர் வாஷிங்டன் நகரை சேர்த்து 538 பிரதிநிதிகள் உள்ளனர். அதில் 270 ஓட்டுகளை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
 
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்து, ஓட்டு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இதுவரை வெளிவந்த தகவலின் படி ஹிலாரியே முன்னிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments