Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள்: காமேனி காட்டம்!

Webdunia
சனி, 18 ஜனவரி 2020 (10:34 IST)
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு எடுபிடி வேலை செய்வதாக ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானுடன் ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டன. சமீப காலத்தில் ஈரான் – அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள மோதலினால் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக கூறப்படுகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தை மீறினால் ஈரானுக்கு பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்காவும் எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் தலைநகர் டெஹ்ரானில் பேசிய ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி ”இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அணுசக்தி பிரச்சினையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல போவதாக அச்சுறுத்துகின்றன. ஐரோப்பிய அரசுகள் ஈரானுக்கு எதிரான விரோதத்தை காட்டி வருகின்றன. ஈரான் – ஈராக் போரின் போது சதாம் உசேனுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் இந்த ஐரோப்பிய அரசுகள். அமெரிக்காவின் எடுபிடியாக அவை செயல்படுகின்றன என்பது தெளிவாக தெரிகிறது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments