Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் பதற்றம்: உக்ரைன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (14:36 IST)
இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இன்று காலை உக்ரைனுக்கு புறப்பட்டது.
 
உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை திரட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
 
இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் உக்ரைனுக்கு பயணிகள் விமானங்களை இயக்கி உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடுக்கு கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இன்று காலை உக்ரைனுக்கு புறப்பட்டது.
 
200க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட ட்ரீம்லைனர் பி-787 விமானம் இந்த சிறப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு விமானம் செவ்வாய்க்கிழமை இரவு டெல்லியில் தரையிறங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை.. வயநாடு நிலவரம்..!

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments