Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான பணிப்பெண் செய்த வினோத செயல்: புகார் அளித்த பயணிகள்

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (16:21 IST)
அமெரிக்காவில் பயணிகளை சிரிக்கவைத்த விமான பணிப்பெண் ஒருவர், ஒரு வினோத செயலை செய்துள்ளார்.

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் நேஷ்வில்லேவில் இருந்து பிலடெல்பியாவுக்கு சவூத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது சூட்கேஸை வைப்பதற்கு லக்கேஜ் வைக்கும் பகுதியை திறந்துள்ளார். அப்போது லக்கேஜ் பகுதியில் ஒரு விமான பணிப்பெண் ஒருவர் படுத்திருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.

அதன் பின்னர்,, அந்த பணிப்பெண் கிட்டத்தட்ட 10 நிமிடங்களாக அந்த லக்கேஜ் பகுதியிலேயே இருந்துள்ளார். அவர் ஏன் இவ்வாறு செய்தார் என விமான ஊழியர்களிடம் கேட்கையில், பயணிகளுக்கு வேடிக்கை காட்டுவதற்காக இவ்வாறு செய்தார் என பதிலளித்துள்ளனர். இதனை சகித்துகொள்ள முடியாத பயணி ஒருவர், அந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பணிப்பெண்ணின் இந்த வினோத செயலுக்கு விளக்கம் அளித்த அந்நிறுவனம், வாடிக்கையாளர்களை சிரிக்கவைப்பதற்காக பணிக்குழுவினர் அவ்வப்போது இது போன்ற வேடிக்கையில் ஈடுபடுவது வழக்கம் என்றும், அதே சமயம் பயணிகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்வதில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. தற்போது இணையத்தில் அந்த பணிப்பெண் செய்த வினோத செயல் வீடியோவாக வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

ஆளுநர் தமிழக மக்கள் மீது வெறுப்பு கொள்கிறாரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments