அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

Siva
ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (10:28 IST)
அமேசான் செயலியில் ஏஐ உரையாடல் வசதி சேர்க்கப்பட்டதை அடுத்து, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால சலுகை விற்பனை தொடங்கும் நிலையில், அமேசான் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) உரையாடல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

'ரூஃபுஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உரையாடல் வசதி அமேசான் செயலியுடன் இணைக்கப்பட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கப் போகும் பொருள்கள் குறித்த விவரங்களை இந்த AI செயலியின் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், எந்த நிறுவனத்தின் பொருட்களை வாங்கலாம் என்பது போன்ற சிபாரிசுகளையும் இதில் அறிந்து கொள்ளலாம்.

அது மட்டுமின்றி, ஒரு நிறுவனத்தின் பொருளுடன் இன்னொரு நிறுவனத்தின் பொருளை ஒப்பிடும் வசதியும் இதில் உள்ளது. எழுத்துக்களால் அல்லது பேசுவதன் மூலமும் இந்த செயலியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு போட வந்த ரஜினி மக்களுக்கு சொன்ன அட்வைஸ்!.. ஃபாலோ பண்ணுங்கப்பா!...

100% Confident ஆக இருக்கிறேன் - வாக்களித்தப்பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி

விஜய் வாக்களிக்க வரும்போது கட்டுக்கடங்காத கூட்டம்.. போலீசார் பாதுகாப்பு கொடுக்க திணறல்..!

காலை 6.54 மணிக்கு பதிவான தமிழ்நாட்டின் முதல் ஓட்டு.. அஜித் ஓட்டு போட்டார்.. முக்கிய புள்ளிகளின் ஓட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments