Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கன் மீது துல்லியமான தாக்குதல்: அமெரிக்க வீரர்களுக்கு டிரம்ப் பாராட்டு

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (04:01 IST)
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா திடீரென பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதால் உலக நாடுகள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் ரியாக்ஷன் என்ன என்பது குறித்து இன்னும் தெரியாத நிலையில் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய அமெரிக்க வீரர்களுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.



 


ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு அதிரடியாக அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவு காரணமாக  ஆப்கானிஸ்தான் மீது பயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் என்ற இடத்தில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மதர் ஆப் ஆல் பாம்'' என்ற பெயரில் சுமார் 21,000 பவுன்ட் எடையுள்ள 'MOAB' என்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டது

இந்த தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் பெருமையுடன் கூறியபோது, 'அமெரிக்க ராணுவத்தை எண்ணி பெருமைப்படுவதாகவும், ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகளுக்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க ராணுவத்தை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments