Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி - கிராம மக்கள் அச்சம்

Webdunia
சனி, 24 ஜூன் 2017 (12:24 IST)
தென் ஆப்பிரிக்காவில் ஒரு கிராமத்தில் ஒரு ஆடு ஈன்ற குட்டி பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் இருந்த விவகாரம் அந்த கிராம மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.


 

 
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் லேடி ஃப்ரேர் என்ற கிராமம் உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். சமீபத்தில் அங்கு வசிக்கும் ஒரு விவசாயின் ஆடு ஒரு குட்டியை ஈன்றது. அந்த குட்டி பாதி மனித உருவத்திலும், பாதி மிருக உருவத்திலும் இருந்தது. மேலும், அது இறந்தநிலையிலேயே பிறந்தது.
 
இதைக்கண்ட அந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் மிகவும் பிற்போக்குவாதிகளாவும், மூட நம்பிக்கைகளையும் கொண்டிருந்ததால், அது சாத்தானின் குட்டி எனவும், அதனால், இந்த கிராமத்திற்கு பெரிய ஆபத்து வரப்போவதாகவும் அவர்கள் நம்பினர். 
 
இந்த புகைப்படம் வெளியே கசிய தொடங்கியதும், இது குறித்து ஆய்வு செய்ய அரசு தரப்பிலிருந்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அந்த கிராமத்திற்கு சென்றனர். அந்த ஆட்டுக்குட்டி எப்படி இப்படி ஒரு வினோதமான குட்டியை ஈன்றது என்பதை அவர்கள் கண்டறிய முயன்றனர்.
 
அப்போது, அந்த குட்டியை ஈன்ற ஆடு, ஒருவகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால், குறைமாதத்தில் அப்படி ஒரு குட்டியை ஈன்றது கண்டுபிடிக்கப்பட்டது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments