Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலி பிரியாணிக்கு ரெடியா? சூப்பர் மார்க்கெட்டால் நொந்து போன நபர்..

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (14:53 IST)
சூப்பர் மார்க்கெட்டில் தாம் வாங்கிய அரிசி பாக்கெட்டில் எலி செத்துக் கிடந்ததை கண்டு வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
ஜெர்மனியில் ரிச்சர்ட் என்ற நபர் 2 நாட்களுக்கு முன்னர் சூப்பர் மார்க்கெட்டிற்கு பர்சேஸுக்காக சென்றுள்ளார். அங்கு அவர் வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்துள்ளார்.
 
தான் வாங்கி வந்த அரிசி பாக்கெட்டை சமைத்த அவருக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. ஏனென்றால் அந்த அரிசி பாக்கெட்டில் எலி ஒன்று செத்து கிடந்துள்ளது. 
 
இதுகுறித்து டிவிட்டரில், சூப்பர் மார்க்கெட்டுக்கு கேள்வி எழுப்பிய ரிச்சார்ட், எப்படி இந்த எலி அரிசி பாக்கெட்டிற்குல் வந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் இந்த எலியிலிருந்து வரும் துர்நாற்றத்தால் எனது மனைவி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வாந்தி எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
 
இதற்கு பதிலளித்த அந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனம், சிரமத்திற்கு மன்னியுங்கள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments