Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தருணத்தில் மகனை பறிகொடுத்த தாயே கொலையாளியை காப்பாற்றிய வினோதம்!

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (12:31 IST)
ஈரானில் தூக்குக் கயிறு மாட்டிய பிறகு தனது மகனைக் கொலை செய்த குற்றவாளியையே காப்பாற்றிய தாயின் செயல் பெரும் நெகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெருச்சண்டை ஒன்றில் 7 ஆண்டுகளுக்கு முன்னால் அப்துல்லா என்பவரை பலால் என்ற இந்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
நேற்று தண்டனை நிறைவேற்றும் நாள் வந்தது. அப்போது, தூக்குக் கயிறை பலால் கயிற்றில் சிறை அதிகாரிகள் மாட்டினர். சில நிமிடங்களில் தண்டனை நிறைவேற இருக்கும் நிலையில், கொல்லப்பட்ட அப்துல்லாவின் தாய் ஓடி வந்து, பலாலின் கன்னத்தில் பளார் பளார் என்று அறை விட்டு, அவனது கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார். 

இதனை பார்த்த பலாலின் தாயார், அப்துல்லாவின் தாயாரை கட்டி அணைத்து அழுதார். இதனால், பலாலை தூக்கிலிடும் பணி நிறுத்தப்பட்டது.
 
இது குறித்து பேசிய அப்துல்வின் தந்தை,  கடந்த 3 தினங்களுக்கு முன்பு எனது மனைவியின் கனவில் எனது மூத்த மகன் வந்து உள்ளான்.
 
அவன், தான் நல்ல இடத்தில் இருப்பதாகவும் எனவே, பழிக்கு பழி வாங்க வேண்டாம் என்றும் எனது மனைவியிடம் கூறியுள்ளான். இது எனது மனைவியை அமைதியடைய செய்தது. எனவே, தண்டனை நிறைவேறும் நாள் வரை நாங்கள் அதிகமாக யோசித்தோம் என்று தெரிவித்துள்ளார். 
 
பலாலுக்கு மரண தண்டனையை குறைக்க அந்த பெற்றோர் கூறியுள்ளனர். எனினும், பலால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments