Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் திடீர் ஓட்டை: வீடியோ

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2016 (11:53 IST)
டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம்  ஒன்று 74 பயணிகளுடன் சோமாலியாவைச் சேர்ந்த மொகடிஷூவில் இருந்து டிஜிபோட்டி நாட்டிற்கு நேற்று சென்றுகொண்டிருந்தது. விமானம் புறப்பட்டு 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வலது பக்கத்தில் ஏதோ ஒன்று வெடிப்பது போல் சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பகுதியில் தீ பற்றியது. இதனைக் கண்ட விமானி விமானத்தை மொகடிஷூயில் அவசரமாக தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியதும் உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.


 

இந்த சம்பவத்தில் இருவர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விமானத்தில் ஓட்டை விழுந்தபோது, ஆக்சிஜன் முகமூடியுடன் மரண பயத்தில் இருந்த பயணி ஒருவர் அதனை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக...
 

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

Show comments