Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயது மகளை 55 வயதினருக்கு திருமணம் செய்துவைத்த தந்தைக்கு அடி – வீடியோ

6 வயது மகளை 55 வயதினருக்கு திருமணம் செய்துவைத்த தந்தைக்கு அடி – வீடியோ

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (16:41 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தை சேர்ந்த ஒருவரால் உழைத்து, சம்பாதித்து தனது குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை. இதனால், தனது 6 வயது மகளான ஹாரிபவுல் என்பவரை அப்பகுதியில் வசித்து வரும் சையத் அப்துல் கரீம் (55) என்பவருக்கு ‘பண்டமாற்று’ முறையில் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்.


 


தனது மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், ஆடு போன்றவற்றை அந்நபரிடம் இருந்து வாங்கியுள்ளார். இதை அறிந்த உள்ளூர் பெண்கள், அந்த 55 வயது பெரியவரையும், சிறுமியின் தந்தையையும் அடித்து உதைத்துள்ளனர். இது பற்றி, தகவல் அறிந்து வந்த காவல்துறையினரிடம் அந்த வயதான நபர், சிறுமியை காட்டி, ”இவள் என்னுடைய மனைவி, அவளுக்கு 18 வயது பூர்த்தியானவுடன் நான் அவளுடன் உறவு கொள்வேன், அதுவரை நான் இவளை பத்திரமாக பார்த்துக்கொள்வேன்” என கூறியுள்ளார்.

அதை, ஏற்க மறுத்த காவல்துறையினர், பெண்ணின் தந்தை மீதும், அந்த வயதானவர் மீதும் வழக்கு  பதிவு செய்து, கைது செய்தனர்.  இதற்கிடையே, காவல்துறையினர், அந்த சிறுமியை அவரது, தாயாரிடம் ஒப்படைத்தனர். சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் திருமணம் செய்து கொண்டதும், இது போன்று, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments