Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சம்பளமா தர மாட்ற?’ கரப்பான்பூச்சியை விட்ட செஃப்! – மூடப்பட்ட உணவகம்!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2023 (12:47 IST)
இங்கிலாந்தில் தனக்கு சம்பளம் தராத உணவகத்தை பழிவாங்க செஃப் ஒருவர் கரப்பான்பூச்சியை கிச்சனில் விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் லிங்கன் நகரத்தில் ராயல் வில்லியம் என்ற உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அதில் சமையற்கலை நிபுணராக டோனி வில்லியம்ஸ் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த விடுதியின் உரிமையாளர் வில்லியம்ஸுக்கு சம்பளத்தை சரியாக தராததால் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் தனது வேலையை வில்லியம்ஸ் ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா செய்தவர் உணவக உரிமையாளரை பழிவாங்க எண்ணியுள்ளார். இதற்காக சுமார் 10 கரப்பான்பூச்சிகளை உணவகத்தின் சமையலறைக்குள் அவர் விட்டுள்ளார். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்த நிலையில் உடனடியாக உணவகம் மூடப்பட்டது.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வில்லியம்ஸ் 17 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். மூடப்பட்ட உணவகத்தில் கரப்பான் பூச்சிகளை நீக்கி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறதாம்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments