Webdunia - Bharat's app for daily news and videos

Install App

F- 16 போர் விமானங்களை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்த வேண்டாம்- பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Webdunia
திங்கள், 14 ஜூன் 2010 (15:17 IST)
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா F - 16 ரக போர் விமானங்களை விற்றுள்ளது. ஆனால் அதே சமயத்தில் அதனை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்த மாத முடிவில் F- 16 ரக போர் விமானங்கள் 18 பாகிஸ்தான் வந்து சேர்கிறது. சமீபத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் போது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா செய்யும் பெரிய அளவிலான ராணுவ உதவி குறித்து இந்தியா தன் கவலையை தெரிவித்தது.

இதனையடுத்து அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் எந்த எதிர்கால வேற்றுமை நிலையிலும் இந்தியாவுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு நிபந்தனை விதித்துள்ளதாக ஒபாமா நிர்வாகம் உறுதி அளித்திருந்தது.

F- 16 போர் விமானங்களுடன் அமெரிக்க விமானப்படை பொறியியலாளர்களும் பாகிஸ்தான் விமான தளத்திற்கு வருகை தருகின்றனர். தாலிபான், அல்-கய்டா ஆகியோருக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொள்ளும் நடவட்க்க்கைகளையும் இவர்கள் மேற்பார்வையிடவுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments