28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Prasanth Karthick
வியாழன், 29 மே 2025 (21:09 IST)

கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி பல லட்சம் உயிர்களை பலிக் கொண்டது. அதன் பாதிப்பிலிருந்து உலகம் மீண்டு வர சில ஆண்டுகள் ஆனது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் கொரோனாவின் புதிய வேரியண்ட் பரவத் தொடங்கியுள்ளது.

 

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றான இது இந்தியா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் பரவியுள்ளது. சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மே 28 வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. இதில் கேரளாவில் அதிகளவில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

 

இந்நிலையில் உலக அளவில் புதிய கொரோனா வேரியண்டால் 28 நாட்களில் 91,583 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments