Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர் திரைப் படங்களின் பெயர்கள் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 16 ஜனவரி 2015 (10:54 IST)
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கு பேர்ட்மேன், தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் உட்பட 8 படங்கள் போட்டியிடுகின்றன.
 
இந்த இரண்டு படங்களும் 9 வேறுபட்ட விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
 
போலந்து, ரஷ்யா, எஸ்டோனியா, மோரிடானியா மற்றும் அர்ஜென்டினாவில் தயாரிக்கப்பட்ட படங்கள் சிறந்த வேற்று மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
 
ஹாலிவுட் திரையுலகில் உயர்ந்ததாகக் கருதப்படும் இந்த விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை நான்கு கோடியே 30 லட்சம் அமெரிக்கர்கள் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.
 
கடந்த பத்து ஆண்டுகளில் மிகவும் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு இதுதான்.

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments