Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்மநபர் துப்பாக்கிச் சூடு; 8 பேர் பலி; மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Arun Prasath
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (20:31 IST)
கோப்புப்படம்

மெக்சிகோவில் ஸ்லாட் மிஷன் அரங்கம் பகுதியில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டதில் 8 பேர் பலியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் மிக்லோகன் மாநிலம் மேக்டலினா மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்லாட் மிஷன் அரங்கம் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தார். இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒருவர் காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இத்தாக்குதல் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகமாகி வரும் நிலையில், பல குழுக்களுக்கு இடையே கடும் மோதல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன என்று பல செய்திகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments