Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7,000 பேர் கலப்பு திருமணம் செய்துகொண்ட மெகா திருமணம்!

7,000 பேர் கலப்பு திருமணம் செய்துகொண்ட மெகா திருமணம்!
, செவ்வாய், 19 பிப்ரவரி 2013 (15:20 IST)
தென் கொரியாவில் ஒருங்கிணைப்பு சபை தேவாலயம் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட திருமண விழாவில் 7000 பேர் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

தென் கொரியாவை சேர்ந்த சன் மியுங் மூன் என்பவர் ஒருங்கிணைப்பு சபை தேவாலயத்தில் கடந்த 1960ஆம் ஆண்டு முதல் ஜாதி, மத, பேதங்களை கடந்த கலப்புத் திருமணங்களை ஊக்குவித்து வந்தார்.

ஆரம்ப கட்டத்தில் சில ஜோடிகள் இந்த தேவாலயத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். நாளடைவில், இந்த கலப்புத் திருமண விழாக்களில் ஆயிரக்கணக்கான ஜோடிகள் ஒரே நேரத்தில் பங்கேற்று திருமணம் செய்துக் கொள்ள துவங்கினர்.

காதல் திருமணம், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், ஒரே மத திருமணம், மதம் மாறிய திருமணம், மதங்களை கடந்த திருமணம் என ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜோடிகள் மாலை மாற்றி தங்களது வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர்.

இந்நிலையில், தென் கொரியா தலைநகர் சியோல் அருகே உள்ள தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட திருமண விழாவில் 3,500 தம்பதியினர் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த திருமண விழாவில் மணமுடித்த மணமக்களை வாழ்த்த 20,000 க்கும் மேற்பட்டோர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil