Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவான் அருகே நிலநடுக்கம்: ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2015 (10:21 IST)
கிழக்கு தைவான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், தெற்கு ஜப்பான் பகுதியில் உள்ள தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 6.8ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் தைவான் தலைநகரான தைப்பேயில் உள்ள கட்டிடங்கன் குலுங்கின. இதன் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
 
இதனால், தைவான் அருகில் இருக்கும் தெற்கு ஒகினாவாவில் உள்ள தொடர் தீவுகளில் சிறிய அளவிலான சுனாமி தாக்கக்கூடும் என ஜப்பான் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளாது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள துறைமுக பகுதியில் கடல் மட்டத்தில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அந்நாட்டு தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

Show comments