Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் 56 பேருக்கு மரண தண்டனை - சவூதியில் கொடூரம்

ஒரே மாதத்தில் 56 பேருக்கு மரண தண்டனை - சவூதியில் கொடூரம்

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2016 (19:18 IST)
ஜனவரி மாதத்தில் மட்டும் 56 மரண தண்டனைகளை சவூதி அரேபிய நிர்வாகம் நிறைவேற்றி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
 

 
சவூதி அரேபியாவில் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது மிகவும் சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருந்து வருகிறது. அப்பாவிகளுக்கும் அவசர, அவசரமாகத் தீர்ப்பு வழங்கி, தண்டனை அளிக்கப்பட்டு விடுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உள்ளது.
 
இத்தகைய தண்டனைகள் வழங்குவது பற்றி அமெரிக்கா எந்தக்கருத்தும் சொல்லாமல் மவுனம் சாதித்து வருகிறது. சவூதி அரேபிய ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் உத்தரவுகளைக் கேட்டு நடந்து கொள்வதால்தான் இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டு கொள்வதில்லை என்று அரசு எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
 
கடந்த ஆண்டில் 153 பேருக்குமரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களில் 71 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாவர். வீடுகளில் பணி செய்வதற்காக வந்தவர்களில் பலரும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். 1995 ஆம் ஆண்டிலிருந்து மரண தண்டனை நிறைவேறுவது மீண்டும் அதிகரித்திருக்கிறது.
 
இந்நிலையில், நடப்பாண்டில் ஒரே மாதத்திலேயே 56 பேருக்கு வழங்கிவிட்டார்கள். இது குறித்து உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்ததோடு, கடும் கண்டனத்தையும் எழுப்பியுள்ளன.
 
ஜனவரி 31ஆம் தேதியன்று சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அவருக்குமரண தண்டனை நிறைவேற்றப் பட்டதோடு, ஜனவரி மாதத்தில் 56 தண்டனைகள் நிறைவேறியுள்ளன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments