மர்ம நோயால் 4 வயது சிறுவனின் முதுமை தோற்றம்
மர்ம நோயால் 4 வயது சிறுவனின், முதுமை தோற்றம்
வங்காளதேசத்தில் பைசித் ஷிக்தர் என்னும் 4 வயது சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள மர்ம நோயால், அச்சிறுவன் வயதான முதியவர் போல் தோற்றமளிக்கிறான்.
வங்காளதேசத்தை சேர்ந்த லாப்லு லட்கர் - காத்தூன் தம்பதியரின் மகன் பைசித் ஷிக்தர், பிறக்கும் போதே திடமான உடலமைப்பு இல்லாமல் காணப்பட்டான். நாளடைவில் இது சரியாகிவிடும் என அவனது பெற்றோர் கருதினர். ஆனால், அதற்கு மாறாக முதுமையாக சிறுவன் வளர்ந்து வந்தான்.
’புரோகேரியா’ எனப்படும் விரைவில் மூப்படையும் விசித்திர வியாதியால் தான் சிறுவன் பாதிக்கப்பட்டிருக்கிறான். நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்து கொள்வது மற்றும் மரபுசார்ந்த குறைபாடுகளால் உண்டாகும் இந்த அரியநோய்க்கு இலவசமாக சிகிச்சை அளிக்கவும் டாக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை தற்போது முன்வந்துள்ளது.
பைசித் ஷிக்தருக்கு வெறும் அபரிமிதமான தோல் வளர்ச்சி மட்டுமின்றி, இதயம், கண், காது, பிறப்புறுப்பு போன்ற பகுதிகளிலும் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.