Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் அதிர்ச்சி அளிக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 34 ஆயிரம் பேருக்கு பாசிட்டிவ்

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (07:56 IST)
ஒரே நாளில் 34 ஆயிரம் பேருக்கு பாசிட்டிவ்
கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவை விட தற்போது அமெரிக்காவில் தான் படு பயங்கரமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. முதல் 70 நாட்களில் அங்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கபப்ட்ட நிலையில் அடுத்த ஐந்தே நாட்களில் அது 3 லட்சமாக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 34 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே ஒரே நாளில் மிக அதிக நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது நேற்றுதான் என்றும் அதுவும் அமெரிக்காவில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12.016 லட்சமாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் 311,357 பேர்களும், ஸ்பெயின் நாட்டில் 126,168 பேர்களும், இத்தாலியில் 124,632 பேர்களும், ஜெர்மனியில் 96,092 பேர்களும், சீனாவில் 81,669 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments