உலக கொரோனா: பாதிப்பு 3.80 கோடி, குணமானோர் 2.85 கோடி

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (07:01 IST)
உலகில் கொரோனா தொற்றால்  3,80,29,217 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,85,092 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையிலும் உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,85,87,898 பேர் மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 83,56,227 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
 
உலகில் நேற்று மிகஅதிகபட்சமாக இந்தியாவில் 54,265 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல் உலகில் நேற்று அதிகபட்சமாக இந்தியாவில் 710 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.
 
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45,759 என்றும்,
இங்கிலாந்தில் நேற்று 13972 பேருக்கும், ரஷ்யாவில் 13592 பேருக்கும் பாதிப்பு என்றும் தகவல் வெளிவந்துள்ளது. 
 
மேலும் அர்ஜெண்டினாவில் 318 பேரும், இங்கிலாந்தில் 316 பேரும் ஈரானில் 272 பேரும், பிரேசிலில் 203 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments