டெக்சாஸ் சர்ச்சில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கி சூடு: 27 பேர் பலி!!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (10:49 IST)
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திஒய துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.


 
 
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள பாப்டிஸ்ட் சர்ச்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
பிரத்தனைக்காக ஏராளமான மக்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார். 
 
இதனால் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியாகியுள்ளனர். 30-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 
 
இந்த சம்பவத்தினை அடுத்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் கொல்லப்பட்டார். ஆனால் அவர் போலீசாரால் கொல்லப்பட்டாரா? அல்லது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என தகவல் தெரியவில்லை.
 
அமெரிக்காவில் சமீபத்தில் அதிக அளவில் தீடீர் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN TET 2026: சிறப்பு டெட் தேர்வு!.. விண்ணப்பங்கள் வரவேற்பு!.. முழு தகவல்!...

பாஜகவும் தேர்தல் ஆணையமும் சதி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெறும்: நவம்பர் 21 முதல் கனமழை..!

எங்கருந்து வந்தீங்க?!. SIR படிவம் தொடர்பாக கோபப்பட்ட மன்சூர் அலிகான்!..

அதிமுகவுடன் கூட்டணி?.. பேச்சுவார்த்தையை துவங்கிய விஜய்?!.. அரசியல் பரபர...

அடுத்த கட்டுரையில்
Show comments