Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய தரைக்கடலில் படகில் 21 பெண் அகதிகள் பிணம்

மத்திய தரைக்கடலில் படகில் 21 பெண் அகதிகள் பிணம்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2016 (11:17 IST)
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள படகு ஒன்றில் 21 பெண் அகதிகளின் பிணம் கண்டெடுப்பு.


 


ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகள் படகில் மத்திய தரைக்கடலை தாண்டி சென்று ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகிறார்கள். அதேபோல் நைஜீரியா மற்றும் சிசிலி நாடுகளை சேர்ந்தவர்கள் ஒரு படகில் மத்திய தரைக்கடலில் இத்தாலியை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

லிபியா அருகே அந்த படகு சென்ற போது சர்வதேச மருத்துவ கண்காணிப்பு குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் அந்த படகை மடக்கி சோதனையிட்டனர். அந்த படகின் கீழ் தளத்தில் 21 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

இந்த படகில் 50 குழந்தைகள் உள்பட 209 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரையும் மருத்துவ குழுவினர் மீட்டனர். 22 பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. படகில் இருந்த டீசலில் தண்ணீர் கலந்து அதன் மூலம் ஒரு வித நச்சு வாயு பரவியபடி இருந்தது. எனவே, அதனால் ஏற்பட்ட மூச்சு திணறலில் அவர்கள் இறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆனால், ஒரு சில பெண்கள் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. எனவே, இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments