Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவின் 2000 ஆண்டு பழங்கால கோவிலை அழித்தது "இஸ்லாமிய அரசு"

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2015 (16:05 IST)
சிரியாவின் முக்கிய கலாச்சார பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படும் சிரியாவின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றான பல்மைராவில் உள்ள பால் ஷமின் பழங்காலக் கோவிலை இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் அழித்துவிட்டனர்.
 
இஸ்லாமிய அரசு என்கிற குழுவினர் வெடிவைத்து தகர்த்ததாக கூறப்படும் 2000 ஆண்டு பழமையான பால் ஷமின் கோவில்
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தைச் சுற்றி வெடிப்பொருட்களை வைத்த ஜிகாதிகள், அதனை வெடிக்கச் செய்ததாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மத்திய கிழக்கின் தொல்லியல் பெருமைகளில் பல்மைரா நகரம் தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது
மத்திய கிழக்கில் உள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் இடங்களில் பல்மைரா நகரமும் ஒன்று.
மத்திய கிழக்கின் தொல்லியல் பெருமைகளில் தனித்துவமானதாக பார்க்கப்படும் பல்மைரா நகரம்
பல்மைரா நகரிலுள்ள பண்டைய இடிபாடுகளை பராமரிப்பதில் தனது வாழ்க்கையை அர்பணித்திருந்த எண்பத்தியிரண்டு வயது தொல்பொருள் ஆய்வாளர் ஒருவரை, ஆயுததாரிகள் கடந்த வாரம் தலையை வெட்டி கொலைச் செய்திருந்தனர்.
 
கடந்தவாரம் கழுத்தறுத்து கொல்லப்பட்ட தொல்லியலாளர்
இது போன்ற சன்னதிகள் மற்றும் கடவுளர் சிலைகள் இருப்பது, இஸ்லாத்தை தவிர வேறொரு சமயம்/தெய்வம் இருப்பதைக் குறிப்புணர்த்துவதாகவும், அதனால் அவை தொடர்ந்து இருப்பது இஸ்லாமிய மதநிந்தனையாகவும் இஸ்லாமிய அரசு குழு கருதுகிறது.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments